உலகம்

பருவநிலை மாநாடு: ஜோ பைடனுக்கு அழைப்பு விடுத்த பிரிட்டன் பிரதமர்

11th Nov 2020 03:44 PM

ADVERTISEMENT

அடுத்த ஆண்டு ஸ்காட்லாந்தில் நடைபெற உள்ள பருவநிலை மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்துள்ளார்.

நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். பருவநிலை மாற்றம் குறித்த டிரம்பின் முடிவை விமர்சித்துவந்த ஜோ பைடன் தான் அதிபரான 77 நாள்களுக்குள் பாரீஸ் பருவநிலை மாநாட்டில் அமெரிக்கா இணையும் எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஸ்காட்லாந்தில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் அவையின் பருவநிலை மாற்ற மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் (தேர்வு) ஜொ பைடனை கலந்து கொள்ள பிரிட்டன் பிரதமர் ஜான்சன் அழைப்புவிடுத்துள்ளார்.

ADVERTISEMENT

முன்னதாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு போரிஸ் ஜான்சன் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

Tags : boris johnson
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT