உலகம்

ஸ்புட்னிக் வி கரோனா தடுப்பூசி 92% பயன் திறனுடன் உள்ளது: ரஷியா

11th Nov 2020 04:19 PM

ADVERTISEMENT

ஸ்புட்னிக் வி கரோனா தடுப்பூசி 92 சதவீதம் பயன்திறனுடன் உள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்தும் விதமாக உலகின் பல்வேறு நாடுகளும் கரோனா தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் ரஷியா கடந்த ஆகஸ்ட் மாதம் கரோனா பாதிப்பிற்கு தடுப்பூசி கண்டறிந்து விட்டதாக ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசியை அறிமுகப்படுத்தியது.

இந்தத் தடுப்பூசியின் சோதனைகள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் இரண்டாம்கட்ட சோதனைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ரஷியாவின் நேரடி முதலீட்டு நிதியம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி 92 சதவீதம் பயன்திறன் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ரஷிய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ, "தடுப்பூசியின் பயன்பாடு மற்றும் மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் தொற்றுநோயைத் வெல்வதற்கான மிக வெற்றிகரமான பாதையில் பயணிப்பதை உறுதிப்படுத்துகின்றன" எனத் தெரிவித்தார்.

Tags : Sputnik V
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT