உலகம்

காலநிலை மாற்றத்தால் உயிரினங்களின் வாழ்விடம் குறையும் ஆபத்து

11th Nov 2020 06:59 PM

ADVERTISEMENT

காலநிலை மாற்றத்தால் அடுத்த 80 ஆண்டுகளில் உலகம் முழுவதும் உள்ள உயிரினங்களின் 23% வாழ்விடங்கள் குறைய வாய்ப்பிருப்பதாக  சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.

அதிகரித்துவரும் காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. திடீர் மழைப்பொழிவு, அதிகரிக்கும் புயல்கள், உயரும் வெப்பநிலை போன்றவற்றால் சூழலியலில் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் காலநிலை மாற்றத்தால் உயிரினங்களின் வாழ்விடங்களில் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வுக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவை நேச்சர் கம்யூனிகேஷன் இதழ் வெளியிட்டுள்ளது. 

மனிதர்களின் நிலப் பயன்பாடு மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக உலகெங்கிலும் உள்ள பறவைகள், பாலூட்டிகள் மற்றும் விலங்குகள் போன்ற உயிர்களின் வாழ்விடங்கள் சராசரியாக 18% அழிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால் அடுத்த 80 ஆண்டுகளுக்குள் உயிரினங்கள் தங்களது வாழ்விடங்களை 23% இழக்க வாய்ப்புள்ளதாக இந்த ஆய்வு எச்சரித்துள்ளது.

இயற்கை தாவரங்களின் நிலங்களை விவசாய மற்றும் நகர்ப்புற நிலங்களாக மாற்றுவது, காலநிலை மாற்றம் காரணமாக உயிரினங்களின் இயற்கை வாழ்விடங்கள் சுருங்குவது ஆகியவை உயிரினங்களின் இயற்கை வாழ்விடங்கள் அழிவதற்கு முக்கிய காரணிகளாக உள்ளதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விலங்கியல் துறையைச் சேர்ந்த டாக்டர் ராபர்ட் பேயர், “அனைத்து பறவைகள், பாலூட்டிகளின் வாழ்விடங்களின் அளவு குறைந்து வருகிறது. விவசாயத்திற்கும் நகர்ப்புற நடவடிக்கைகளுக்கும் மனிதர்கள் உயிரினங்களின் வாழ்விடத்தைப் பயன்படுத்துவதே இதற்கு முக்கிய காரணம்.” எனத் தெரிவித்துள்ளார்.

Tags : Climate change
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT