உலகம்

பிலிப்பைன்ஸில் தொடரும் புயல் பாதிப்புகள்

11th Nov 2020 03:27 PM

ADVERTISEMENT

பிலிப்பைன்ஸில் தொடரும் புயல் பாதிப்பால் கிழக்குக் கடலோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களாக புயல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் பலத்த காற்று மற்றும் மழைப்பொழிவினால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்வர உள்ள டைபூன் வாம்கோ புயலிலிருந்து தப்பிக்க கிழக்கு கடலோர மக்களை பாதுகாப்பான இடங்களில் சேர்க்கும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது. மணிக்கு 125 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனக் கணிக்கப்பட்ட இந்த புயல் இந்த ஆண்டு பிலிப்பைன்ஸைத் தாக்கும் 21ஆவது புயலாகும்.

கடந்த அக்டோபர் மாத இறுதியில் பிலிப்பைன்ஸில் உருவான டைபூன் கோனி புயலினால் அந்நாடு பலத்த பாதிப்பைச் சந்தித்திருந்தது. இந்தப் புயல் பாதிப்பால் 25 பேர் பலியாகினர். 

ADVERTISEMENT

Tags : Philippine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT