உலகம்

ஈரானில் கரோனா பாதிப்பு மற்றும் பலியில் புதிய உச்சம்

11th Nov 2020 09:31 PM

ADVERTISEMENT


ஈரானில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக 11,780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 462 பேர் பலியாகியுள்ளனர்.

அந்நாட்டில் கரோனா பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து இதுவே ஒருநாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை.

இதுபற்றி ஈரான் சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வித் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தாவது:

"புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 3,339 பேருக்கு மருத்துவமனை உதவி தேவைப்படுகிறது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,15,068 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 39,664 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

இதுவரை மொத்தம் 5,36,105 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5,601 பேர் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்."

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT