உலகம்

ஷார்ஜாவில் இந்தியப் பொறியியல் மாணவர் தற்கொலை

11th Nov 2020 01:19 PM

ADVERTISEMENT


ஷார்ஜா: ஷார்ஜாவின் ஏஐ ரோல்லா பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த 21 வயதான இந்திய பொறியியல் மாணவரின் உடல் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.

இதையும் படிக்கலாம்.. பள்ளி, கல்லூரிகளைத் திறக்க பெரும்பாலான பெற்றோர் எதிர்ப்பு: தமிழக அரசு தகவல்

மீட்கப்பட்ட இளைஞர், துபையைச் சேர்ந்த ஜ்யோத் என்பதும், நவம்பர் 2-ம் தேதி அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த மரணத்தில் வேறு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை என்றும், மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுவதாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ADVERTISEMENT

இதையும் படிக்கலாமே.. 'பிகாரில் நிதிஷ் குமாரின் வெற்றியை உறுதி செய்தது இவர்கள்தானாம்'

ஜ்யோத்தின் சகோதரர் நிரல் இதுபற்றி கூறுகையில், சம்பவம் நடந்த போது எனது பெற்றோர் வெளியில் சென்றிருந்தனர். அப்போது வீட்டில் யாரும் இல்லை. பூட்டிய அறைக்கதவை உடைத்துத்தான் ஜ்யோத்தின் உயிரில்லாத உடலை மீட்டோம். தற்கொலைக்கான காரணம் குறித்து எந்த கடிதத்தையும் அவர் எழுதிவைக்கவில்லை. அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என்ன பிரச்னை இருந்தது என்பதை கண்டறிய குடும்பத்தினர் அனைவரும் முயன்று வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
 

Tags : India
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT