உலகம்

புளோரிடாவில் வெள்ளம்: கரோனா பரிசோதனைகள் நிறுத்திவைப்பு

11th Nov 2020 02:53 PM

ADVERTISEMENT

புளோரிடா மாகாணத்தில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரோனா பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் ஹார்ட் ராக் திடலில் அதிக அளவிலான மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மேற்கு கியூபாவில் நிலைகொண்டிருந்த இட்டா எனும் வெப்பமண்டலப் புயல் நேற்று புளோரிடா நோக்கி நகர்ந்ததால், புளோரிடா மாகாணத்தில் தொடர் கனமழை பெய்தது. 

இதன் விளைவாக அதிக அளவில் கரோனா பரிசோதனை செய்து வந்த ஹார்ட் ராக் திடல் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இதனால் கரோனா பரிசோதனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

 

வளைகுடா நாடுகளின் கடற்கரையை நோக்கி புயல் நகர்வதால், இந்தப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் புளோரிடாவைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கரோனா பரிசோதனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT