உலகம்

ஆப்கனில் வெடிகுண்டு தாக்குதல்: காவலர்கள் 2 பேர் பலி

11th Nov 2020 04:34 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் காவல்துறையைச் சேர்ந்த இருவர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் புதன்கிழமை காலை 6:30 மணியளவில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. கைர் கானா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை வாகனத்தில் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் காவலர்கள் இருவர் பலியாகினர். ஒருவர் காயமடைந்தார்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

கடந்த 3 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களில் இதுவரை பொதுமக்கள் 876 பேர் பலியாகி உள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

Tags : Afghanistan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT