உலகம்

பஹ்ரைன் பிரதமர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா காலமானார்

11th Nov 2020 03:29 PM

ADVERTISEMENT


மனாமா: அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பஹ்ரைன் பிரதமர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா காலமானதாக அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவருக்கு வயது 84.

அமெரிக்காவில் உள்ள மயோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பஹ்ரைன் பிரதமர், காலமானதாக, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அறிவித்திருப்பதாக பஹ்ரைன் நாட்டின் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

பஹ்ரைன் பிரதமர் காலமானதையடுத்து, ஒரு வாரம் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று பஹ்ரைன் மன்னர் ஷேக் ஹமாத் பின் இஸா அல் கலீஃபா அறிவித்துள்ளார்.

பஹ்ரைன் பிரதமரின் உடல் தாயகம் திரும்பிய பிறகே, இறுதிச் சடங்குகள் நடைபெறும் நாள் மற்றும் இடம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குறிப்பிட்ட சிலர் மட்டுமே இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உலகிலேயே மிக அதிக காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவராக விளங்கியவர் பஹ்ரைன் பிரதமர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : bahrain
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT