உலகம்

“கரோனா தடுப்பூசி இந்த ஆண்டுக்குள் கிடைக்க வாய்ப்பில்லை”: ஃபைசர்

10th Nov 2020 12:01 PM

ADVERTISEMENT

ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் உருவாக்கிய கரோனா தடுப்பூசி இந்த ஆண்டுக்குள் கிடைக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அமெரிக்கா, ரஷியா, சீனா, இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபாடு காட்டி வருகின்றன.

இந்நிலையில் இந்த ஆண்டின் இறுதிக்குள் கரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்பில்லை என ஃபைசர் மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபைசர் தடுப்பூசி குறித்து பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆய்வுக்குழு மேற்கொண்ட ஆய்வில் அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளில், ஆய்வில் உள்ள தடுப்பூசி செலுத்தப்பட்ட 44 ஆயிரம் பேரில் 94 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் தடுப்பூசி பயன்பாடு 90% பயனுள்ளதாக இருப்பதாகவும், எனினும் ஆய்வு நிறைவடையாததால் இதன் இறுதிமுடிவுகள் மாறக்கூடும் என பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆய்வுக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை தடுப்பூசியை சேமித்து வைப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த தரவுகள் இந்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் பால் டுப்ரெக்ஸ், “தடுப்பூசி பயன்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. எனினும் தடுப்பூசி வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதில்லை என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Tags : Corona vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT