உலகம்

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்: ஜோ பைடன்

10th Nov 2020 01:29 PM

ADVERTISEMENT

கரோனா நோய்தொற்றுப் பரவலை எதிர்த்துப் போராட அனைவரும் "முகக்கவசம் அணிய வேண்டும்" என அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் அமெரிக்க மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் வரும் ஜனவரி 20 தேதி  பதவி ஏற்கவுள்ள நிலையில், அது வரை தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒரு பொது தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள விருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் தொற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க  மக்கள் அனைவரும்  முகக்கவசங்களை அணிந்துகொள்வது  உதவும் என்றும் அதனால் மக்கள் அனைவரும் கண்டிப்பாக  "முகக்கவசம் அணிய வேண்டும்" எனவும் பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

ADVERTISEMENT

Tags : Joe Biden
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT