உலகம்

ஆப்கனில் ராணுவத் தாக்குதலில் ஐந்து தலிபான் பயங்கரவாதிகள் பலி

10th Nov 2020 07:47 PM

ADVERTISEMENT

 

காபூல்: ஆப்கனில் லோகர் மாகாணத்தில் காவல்துறை சோதனைச் சாவடி மீது தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பாக லோகர் மாகாண ஆளுநர் அலுவலகம் செவ்வாயன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கிழக்கு ஆப்கனில் லோகர் மாகாணத்தில் அமைந்துள்ள காவல்துறை சோதனைச்சாவடி ஒன்றின் மீது தலிபான் பயங்கரவாதிகள் திங்கள் இரவு தாக்குதல் நடத்தினர். இதற்கு காவல்துறையினர் நடத்திய பதில் தாக்குதலில் ஐந்து தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் மத்திய லோகர் பகுதியில் அமைந்துள்ள காவல் சோதனைச் சாவடி மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், அங்கிருந்த ஏழு காவலர்களைக் கொன்று ஆயுதங்களை அள்ளிச் சென்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT