உலகம்

மியான்மர் தேர்தல் முடிவுகளுக்கு முன்பே வெற்றியை அறிவித்த  ஆங் சான் சூகி கட்சி

10th Nov 2020 07:33 AM

ADVERTISEMENTயாங்கூன்: மியான்மர் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியாவதற்கு முன்னரே, மீண்டும் ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பெற்றுள்ளதாக ஆங் சான் சூகி-யின் தேசிய ஜனநாயக லீக் கட்சி தெரிவித்துள்ளது.

மியான்மர் நாடாளுமன்றத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 90-க்கும் மேற்பட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 3.7 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் வாக்குப் பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை; மேலும், தேர்தல் முடிவுகளை முழுமையாகத் தெரிவிக்க ஒரு வாரம் ஆகும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஆட்சிக்கு தலைவராகவுள்ள ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி, தான் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மொன்யா ஆங் ஷின் கூறியது: 

642 இடங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 322-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். மீண்டும் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை எங்களுக்கு உள்ளது என்றார் அவர்.

ADVERTISEMENT

கடந்த 2015 தேர்தலில் தேசிய ஜனநாயக லீக் கட்சிக்கு ஒத்துழைப்பு அளித்த இனச் சிறுபான்மையினரை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளுடனான உறவு மோசமடைந்து வருவதால், தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெறும் இடங்கள் இத்தேர்தலில் குறையும் எனக் கூறப்படுகிறது.

இருப்பினும் அக்கட்சி வெற்றி பெறும் என்றே பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்னரே அக்கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT