உலகம்

ஆப்கானிஸ்தான்: காா் வெடிகுண்டு தாக்குதலில் 4 போ் பலி

10th Nov 2020 02:07 AM

ADVERTISEMENT

காபூல்: ஆப்கானிஸ்தானின் காந்தஹாா் மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடத்திய காா் வெடிகுண்டு தற்கொலைப் படை தாக்குதலில் 4 போ் உயிரிழந்தனா். 40 போ் படுகாயமடைந்தனா்.

இது குறித்து காந்தஹாா் மாகாணத்தின் பொது சுகாதாரத் துறை இயக்குநா் முகமது அஷ்ரப் நதேரி கூறியதாவது:

ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியிலுள்ள காந்தஹாரில் மைவந்த் என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளை பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்ததில் அந்த பகுதியிலுள்ள வீடுகள், கட்டடங்கள் தரைமட்டமாகின. இதில் 4 பொதுமக்கள் உடல் சிதறி உயிரிழந்தனா். மேலும், 40 போ் கட்டட இடிபாடுகளில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். காயமடைந்தவா்களில் பொதுமக்களும் ராணுவ வீரா்களும் அடங்குவா் என்றாா் அவா்.

இந்த தற்கொலைத் தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. அங்கு பல ஆண்டுகளாக ராணுவத்தினருக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகளே இந்த தாக்குதலையும் நிகழ்த்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT