உலகம்

துருக்கி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 40ஆக உயர்வு

1st Nov 2020 01:03 PM

ADVERTISEMENT

துருக்கியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. 

துருக்கி நாட்டின் மேற்கு இஸ்மிர் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.9ஆக பதிவான அந்த நிலநடுக்கத்தால் இஸ்மிர் நகரமே உருக்குலைந்து போயுள்ளது. ஆங்காங்கே கட்டடங்கள் இடிந்து முற்றிலும் தரைமட்டமாகி உள்ளன. 

இடிபாடுகளுக்கிடையே பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கட்டட இடுபாடுகளில் சிக்கி இதுவரை 40 போ் உயிரிழந்தனா். 800க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனா். சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும், பொதுமக்களும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்நாட்டு அதிபர் எர்டோகன் நேற்று பார்வையிட்டார். 
 

ADVERTISEMENT

Tags : Earthquake
ADVERTISEMENT
ADVERTISEMENT