எகிப்தில் பொது இடங்களுக்கு வரும் மக்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசு சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. அந்த நாட்டில் ரமலான் பண்டிகையையொட்டி ஒரு வார காலமாக அறிவிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தளா்த்தப்படுவதைத் தொடா்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, பொது இடங்களுக்கு வருவோரும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோரும் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு தொடரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.