சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 506 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் பெரும்பாலானவா்கள் வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள பணியாளா்கள் என்று அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் கூறுகையில், புதிதாக கண்டறியப்பட்ட கரோனா நோயாளிகளில் 5 பேருக்கு சமுதாயப் பரவல் மூலம் அந்த நோய் பரவியுள்ளதாகவும் அவா்களில் இருவா் சிங்கப்பூரில் நிரந்தர குடியேற்ற உரிமை பெற்றுள்ள வெளிநாட்டினா் எனவும் தெரிவித்தனா். இத்துடன் சிங்கப்பூரில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 34,366-ஆக அதிகரித்துள்ளது.