உலகம்

பொருளாதார அதிகரிப்பு பொது மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும்: லீக்கெச்சியாங் 

29th May 2020 11:13 AM

ADVERTISEMENT

 

சீனத் தேசிய மக்கள் பேரவையின் கூட்டத் தொடர் 28ஆம் நாள் பெய்ஜிங்கில் நிறைவடைந்தது. சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் இதற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு அதிகரிப்புக்கான விரிவான இலக்கை சீனா உறுதிப்படுத்தவில்லை.

இருப்பினும், குடிமக்களின் வேலை வாய்ப்பு, அடிப்படை வாழ்க்கை உள்ளிட்டவற்றுக்கு உத்தரவாதம் செய்யும் 6 இலக்குகளை சீனா உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம், சீனாவின் பொருளாதார அதிகரிப்பிலிருந்து பொது மக்கள் நேரடியாக பயன்களைப் பெறலாம் என்று குறிப்பிட்டார்.

கரோனா வைரஸ் பரவலால் உலகப் பொருளாதாரத்தில் வரலாற்று காணாத அளவில் பாதிப்புகள் ஏற்படும். உலகப் பொருளாதாரத்துடன் ஆழமாக இணைத்துள்ள சீனப் பொருளாதாரம் இந்த பாதிப்பிலிருந்து தப்பிச் செல்ல முடியாது என்று லீக்கெச்சியாங் தெரிவித்தார். 

ADVERTISEMENT

தகவல்:சீன ஊடகக் குழு

ADVERTISEMENT
ADVERTISEMENT