உலகம்

கொவைட்-19 சமாளிப்பதில் அமெரிக்காவிடம் ஒட்டுமொத்தத் திட்டம் இல்லை 

15th May 2020 01:03 PM

ADVERTISEMENT

 

கொவைட் – 19 நோயைச் சமாளிப்பதற்காக தொடர்பாக அமெரிக்க அரசிடம் ஒட்டுமொத்தத் திட்டம் இல்லை என்று அமெரிக்க சுகாதார அமைச்சகத்தின் முன்னாள் அதிகாரி ரிக் பிரைட் உள்ளூர் நேரப்படி மே 14ஆம் நாள் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, உயிரி மருத்துவ சிறப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராக இருந்த ரிக்பிரைட் பேசுகையில், ஒட்டுமொத்தத் திட்டம் இல்லாத நிலையில், நோயைத் தடுப்பதற்குரிய பொருட்களுக்குக் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதைக் குறிப்பிட்டுச் சொன்ன அவர், எதிர்காலத்தில் தடுப்பூசிப் பணியிலும் இதே போன்ற நிலைமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்துள்ளார். 

12 முதல் 18 மாதங்களுக்குள் கூடியவிரைவில் கரோனா வைரசைத் தடுப்பதற்குரிய தடுப்பூசியை உருவாக்குவது என்பது தீவிர எண்ணம் ஆகும். இந்தப் போக்கு வேகமாக முன்னேறினால், சில முக்கியப் படிநிலைகள் குறைக்கப்படும் என்றும் ரிக் பிரைட் கவலை தெரிவித்துள்ளார். அவ்வாறு நடக்கும் நிலையில் தடுப்பூசி பாதுகாப்பு குறித்து விரிவான முறையில் மதிப்பீடு செய்யாமல் போவதற்குரிய  சாத்தியம் உண்டு. எனவே நமக்கு மேலதிக நேரம் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

தகவல்:சீன ஊடகக் குழுமம்

Tags : covid-19
ADVERTISEMENT
ADVERTISEMENT