உலகம்

ரஷியாவில் ஒரேநாளில் 10,598 பேருக்கு தொற்று உறுதி; மேலும் 113 பேர் பலி

15th May 2020 03:16 PM

ADVERTISEMENT

 

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,598 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஷியாவில் கடந்த இரு வாரங்களாக நாள் ஒன்றுக்கு கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்த நிலையில் உள்ளது. கடந்த 11 ஆம் தேதி 11,656 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதே ஒருநாளில் அதிகபட்ச பாதிப்பாகும். 

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 10,598 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் மொத்த பாதிப்பு 2,62,843 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

ரஷியாவில் இதுவரை கரோனாவுக்கு 2,418 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 113 பேர் பலியாகியுள்ளனர். அதே நேரத்தில் 58 ஆயிரம் பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட  நாடுகளில் ரஷியா 3 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் ஸ்பெயினும் உள்ளன. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT