உலகம்

சீனாவின் பசுமை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஷி ஜின்பிங்

14th May 2020 06:20 PM

ADVERTISEMENT

 

கடந்த 45 நாட்களுக்குள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ஜின்பிங், ட்சேஜியாங், ஷாஅன்சி மற்றும் ஷான்சி ஆகிய மாநிலங்களில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். உயிரினச்சுற்றுச்சூழல் முன்னுரிமை, பசுமை வளர்ச்சி ஆகியவற்றுக்கு அவர் அளித்து வரும் முக்கியத்துவம் இந்தப் பயணங்களில் வெளிக்காட்டப்பட்டுள்ளது. 

15 ஆண்டுகளுக்கு முன், ட்சேஜியாங் மாநிலக் கட்சிக் கமிட்டியின் செயலாளராக பொறுப்பு வகித்த ஷிச்சின்பிங், தன் பதவிக் காலத்தில் தூய்மை நீரும் மலைகளும் வளமான செல்வங்கள் என்ற கருத்துக்களை முதல்முறையாக வெளியிட்டார்.

2020ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் நாள், ஷிச்சின்பிங் ட்சேஜியாங் மாநிலத்தின் யூச்சுன் கிராமத்தில் மீண்டும் பயணம் மேற்கொண்டார். அப்போது, யூச்சுன் கிராமத்தில் கிராம ஆக்கபணி சிறப்பாக நனவாக்கப்பட்டுள்ளதற்குப் பாராட்டு தெரிவித்த அவர், பசுமையான வளர்ச்சி மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சி புதிய கால சீனாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வலியுறுத்தினார்.

ADVERTISEMENT

ஏப்ரல் 20ஆம் நாள், ஷாஅன்சி மாநிலத்தில் பயணம் மேற்கொண்ட அவர், சின்லிங் மலையின் உயிரினச்சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் முக்கிய இடத்தில் வைக்க வேண்டியவை எனக் குறிப்பிட்டார். 

மே 12ஆம் நாள் ஷான்சி மாநிலத்தில் பயணம் மேற்கொண்ட ஷிச்சின்பிங், தையுவான் ஃபென்ஹே ஆற்றங்கரை உயிரினச்சுற்றுச்சூழல் பாதுகாப்பு பெற்ற சாதனைகளைக் கண்டு மனநிறைவு அடைந்தார்.

ஷிச்சின்பிங்கின் இந்த 3 பயணங்களும், புதிய காலத்தில் சீனா, பசுமை வளர்ச்சி பாதையில் ஊன்றி நிற்பதை வெளிப்படுத்துகின்றன.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT