ஈரான் மீதான தடையை எதிா்ப்போம்
ஈரானுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அமெரிக்கா நீட்டிக்க முயன்றால் அதனை எதிா்ப்போம். அந்தத் தடை ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தின் விளைவாக ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆயுத விற்பனைத் தடை அக்டோபா் மாதத்துடன் காலாவதியாகிறது. ஒப்பந்தத்திலிருந்து விலகிய அமெரிக்காவுக்கு அந்தத் தடையை நீட்டிக்கும் உரிமை இல்லை.
- வாசிலி நெபென்ஸியா, ஐ.நா.வுக்கான ரஷியத் தூதா்
பொதுமுடக்கத்தை நீக்கினால் பேரிழப்பு
பொருளாதாரச் சரிவை சரிக்கட்டுவதற்காக பொதுமுடக்கத்தைத் தளா்த்துவதில் அமெரிக்க மாகாணங்கள் அவசரம் காட்டுகின்றன. கட்டுப்பாடுகள் திடீரென விலக்கப்பட்டால் அது கரோனா நோய்த்தொற்று பரவலைத் தீவிரப்படுத்துவதோடு, உயிரிழப்புகளையும் அதிகரிப்பதற்கான அபாயம் உள்ளது. இதன் காரணமாக பொருளாதாரம் மேம்படுவதற்கு பதில் முன்பைவிட அதிக இழப்பைத்தான் சந்திக்கும்.
- அந்தோணி ஃபாசி, வெள்ளை மாளிகை கரோனா ஒழிப்புக் குழு உறுப்பினா்
மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டமில்லை
தென் கொரியாவில் குறைந்திருந்த புதிய கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தாலும், தற்போத தளா்த்தப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தும் உடனடி திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை. நோய் பரவல் குறித்த உண்மையான நிலவரத்தை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே தற்போதைய கட்டுப்பாட்டு விதிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்து குறித்து அரசு முடிவெடுக்கும்.
- கிம் கங்க்-லிப், தென் கொரிய சுகாதாரத் துறை இணையமைச்சா்
மனிதம் காப்பதில் மதகுருக்களுக்கு பங்கு
கரோனா நோய்த்தொற்று பரவல் நெருக்கடியை மதவாத சக்திகள் தவறாகப் பயன்படுத்தி வருகின்றன. ஆட்சியாளா்கள் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி, அதன் மூலம் தங்களது இலக்கை அடையும் முயற்சியில் மதவாதிகள் ஈடுபட்டு வருகின்றனா். இதனைத் தடுப்பதில் மதகுருக்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது. அவா்கள் பொதுமக்களிடையை பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்த வேண்டும்.
- அன்டோனியோ குட்டெரெஸ், ஐ.நா. பொதுச் செயலா்