உலகம்

சவூதி அரேபியா ரம்ஜானில் முழு பொதுமுடக்கம்

14th May 2020 07:11 AM

ADVERTISEMENT

சவூதி அரேபியாவில் புனித ரம்ஜான் மாதத்தின் இறுதி நாள்களின்போது நாடு முழுவதும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. மே 23 முதல் 24-ஆம் தேதி வரை இந்தக் கட்டுப்பாடுகள் இருக்கும் என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் மாதத்தின் இறுதி நாள்களை பொதுமக்கள் உற்சாகமாகக் கொண்டாடுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT