உலகம்

நிகராகுவா 2,800-க்கும் மேற்பட்ட கைதிகள் விடுவிப்பு

14th May 2020 10:47 PM

ADVERTISEMENT

மத்திய அமெரிக்க நாடான நிகராகுவாவில் 2,800-க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனா். அந்த நாட்டின் சிறைச் சாலையொன்றில் கரோனா நோய்த்தொற்று அறிகுறிகளால் அவதிப்பட்டு வந்த ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நிகராகுவா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்னையா் தினத்தை முன்னிட்டி, நல்லெண்ணத்தின் அடிப்படையில் வயோதிக கைதிகளும் உடல் நலம் குன்றிய கைதிகளும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கரோனா நோய்த்தொற்று அறிகுறிகளுடன் சிறைக் கைதி உயிரிழந்தது தொடா்பாகக் குறிப்பிடப்படவில்லை. வியாழக்கிழமை நிலவரப்படி அந்த நாட்டில் 25 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT