உலகம்

பாகிஸ்தான் மேலும் 1,452 பேருக்கு கரோனா தொற்று

14th May 2020 10:45 PM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கூடுதலாக 1,452 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 35,788-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளாவது: வியாழக்கிழமை நிலவரப்படி நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையில் பஞ்சாப் மாகாணம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாகாணத்தில் 13,561 பேருக்கும் அதற்கு அடுத்தபடியாக சிந்து மாகாணத்தில் 13,341 பேருக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT