உலகம்

அமெரிக்காவில் இ-சிகெரட் நோய் பரவலின் காரணம் என்ன?

13th May 2020 04:25 PM

ADVERTISEMENT

 

அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் திங்களில் இ-சிகரெட் பயன்பாட்டால் நுரையீரல் நோய் பாதிப்பு திடீரெனப் பரவியது. இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் அறிகுறிகள் கோவிட்-19 அறிகுறிகளைப் போன்று இருந்தன.

இவ்வாண்டு பிப்ரவரி 18ஆம் நாள் வரை, 2807 பேர் இ-சிகரெட்டில் உள்ள வேதி நச்சின் காரணமாக நுரையீரல் பாதிப்புக்குள்ளாகினர் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்தது. ஆனால் இந்நோய் பரவலின் காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

ADVERTISEMENT

சிஎன்என் நிறுவனத்தின் முதன்மை மருத்துவச் செய்தியாளர் சஞ்சய் குப்தா கூறுகையில், அமெரிக்காவில் இ-சிகரெட் விற்பனை 2007ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. ஆனால் முன்பு இத்தகைய மர்ம நுரையீரல் நோய் ஏற்படவில்லை என்று தெரிவித்தார். மேலும். இது டெட்ராஹைட்ரோகென்னாபினோல்(THC) கொண்டுள்ள இ-சிகரெட் பயன்பாட்டுடன் தொடர்புடையதாக இருக்கலாம். ஆனால் சில மாநிலங்களில் டெட்ராஹைட்ரோகென்னாபினோல்(THC) பயன்பாடு சட்டவிரோதம் ஆகும் என்று குறிப்பிட்ட அவர், அந்த மாநிலங்களில் இ-சிகரெட் பிடிப்பவர்கள் நோய்வாய்ப்பட்டதற்கான காரணம் என்ன என்று சந்தேகம் எழுந்துள்ளது என்று தெரிவித்தார்.

தவிரவும், 2019ஆம் ஆண்டு அக்டோபரில் மயோ மருத்துவமனை 17 நோயாளிகளின் நுரையீரல் திசு மாதிரிகளை ஆய்வு செய்த பிறகு, இந்த நோயாளிகள், நச்சு வேதி பொருட்களால் பாதிப்படைந்தது போல் இருந்தனர் என்று தெரிவித்தது.

இ-சிகெரட் பயன்பாட்டால் வரும் நோய், போர்ட் டெட்ரிக் உயிரியல் மையம் மூடப்படுதல், காய்ச்சல், கோவிட்-19 நோய் ஆகியவற்றுக்கும் இடையேயான தொடர்புகள் குறித்து பொது மக்களுக்கு அமெரிக்காதான் விளக்கம் அளிக்க வேண்டும். 
தகவல்:சீன ஊடகக் குழுமம்
 

ADVERTISEMENT
ADVERTISEMENT