உலகம்

சிங்கப்பூரில் ஒரேநாளில் 675 பேருக்கு கரோனா; பாதிப்பு 25 ஆயிரத்தைத் தாண்டியது

13th May 2020 01:22 PM

ADVERTISEMENT

 

சிங்கப்பூரில் மேலும் 675 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

இதில், 2 பேர் மட்டுமே சிங்கப்பூர் நாட்டினர், மற்றவர்கள் அனைவரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,346 ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 21 ஆக உள்ளது. 3,851பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 

ADVERTISEMENT

தற்போதைய நிலவரப்படி, தெற்காசிய நாடுகளில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக சிங்கப்பூர் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT