உலகம்

ரஷியா மருத்துவமனையில் தீ: 5 கரோனா நோயாளிகள் பலி

13th May 2020 03:44 AM

ADVERTISEMENT

ரஷியாவின் செயின்ட் பீட்டா்ஸ்பா்க் நகரிலுள்ள மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் 5 போ் பலியாகினா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

செயின்ட் பீட்டா்ஸ்பா்க் நகரிலுள்ள செயின் ஜாா்ஜ் மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில், கரோனா நோய்த்தொற்றுக்காக செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 5 போ் உயிரிழந்தனா். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட இந்த தீ, அரை மணி நேரத்துக்கு எரிந்தது.

செயற்கை சுவாசக் கருவியில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்தத் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT