உலகம்

தொடர்ந்து 11 ஆவது நாளாக ரஷியாவில் 10 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு

13th May 2020 03:05 PM

ADVERTISEMENT

 

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,028 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஷியாவில் தொடர்ந்து 11 ஆவது நாளாக, நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்தைக் கடந்த நிலையில் கரோனா பாதிப்பு உள்ளது. கடந்த 11 ஆம் தேதி 11,656 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதே ஒருநாளில் அதிகபட்ச பாதிப்பாகும். 

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 10,028 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் மொத்த பாதிப்பு 2,42,271 ஆக உள்ளது.

ADVERTISEMENT

ரஷியாவில் இதுவரை கரோனாவுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 2,212 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 96 பேர் பலியாகியுள்ளனர். அதே நேரத்தில் 48 ஆயிரம் பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ரஷியாவில் கடந்த சில தினங்களாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பில் 5வது இடத்தில் இருந்த ரஷியா இத்தாலி, பிரிட்டன், ஸ்பெயினை விஞ்சி நேற்று உலக அளவில் கரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் இருந்தது. 

புதன்கிழமை நிலவரப்படி, ரஷியா கரோனா பாதிப்பில் 3 ஆம் இடத்தில் உள்ளது. 

புதன்கிழமை நிலவரம்:

நாடு கரோனா பாதித்தோர் எண்ணிக்கை
அமெரிக்கா 14,08,636
ஸ்பெயின் 2,69,520
ரஷியா 2,42,271
பிரிட்டன் 2,26,463
இத்தாலி 2,21,216
Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT