உலகம்

ஜெர்மனியில் ஒரேநாளில் 798 பேருக்கு கரோனா; மேலும் 101 பேர் பலி

13th May 2020 01:32 PM

ADVERTISEMENT

 

ஜெர்மனியில் மேலும் 798 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, அங்கு மொத்த பாதிப்பு 1,71,306 ஆக அதிகரித்துள்ளது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. தொடர்ந்து, ரஷியா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. 

அதேபோன்று ஜெர்மனியிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 798 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,71,306 ஐ எட்டியுள்ளது. 

ADVERTISEMENT

கடந்த 24 மணி நேரத்தில் 101 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 7,634 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அந்நாட்டில் சுமார் 1.48 லட்சம் பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 

அந்நாட்டின் தொற்று நோய்கள் குறித்த தரவுகளை அளிக்கும் ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் (ஆர்.கே.ஐ) இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT