உலகம்

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 14 லட்சத்தை தொட்டது; பலி 83 ஆயிரம் ஆனது

13th May 2020 11:38 AM

ADVERTISEMENT


உலகையே உலுக்கி வரும் கரோனா தொற்று அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை இன்று 14 லட்சத்தை எட்டிவிட்டது, பலியானோர் எண்ணிக்கை 83 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து ஐநூறு பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். இதனால் அங்கு தொற்று பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83,425 -ஆக அதிகரித்துள்ளது.  

உலக அளவில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43,42,847 ஆக அதிகரித்துள்ளது, இதுவரை 2,92,899 பேர் உயிரிழந்துள்ளனர், 16,02,712 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் 24,47,236 பேரில் 46,342 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாகாணமாக நியூயார்க், நியூஜெர்சி அதியவை உள்ளன.
 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT