உலகம்

பிரிட்டனில் ஊரடங்கு ஜூன் 1ஆம் தேதி வரை நீட்டிப்பு: பிரதமர் போரிஸ் ஜான்சன்

11th May 2020 09:17 AM

ADVERTISEMENT

பிரிட்டனில் ஊரடங்கு ஜூன் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. சா்வதேச அளவில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 41 லட்சத்தைக் கடந்துள்ளது. அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,180,303-ஆக உள்ளது.

2,83,860 பேர் பலியாகியுள்ள நிலையில் 14,90,776 பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். பிரிட்டனை பொறுத்தவரை கரோனா வைரஸால் சுமார் 2 லட்சத்து 19 ஆயிரத்து 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 31 ஆயிரத்து 855 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், லண்டனில் நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றிய பிரதமர் போரிஸ் ஜான்சன், ஊரடங்கு ஜூன் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் பரவலை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வர இது சரியான நேரம் அல்ல.  ஜூன் 1ஆம் தேதி முதல் சில பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது என்றார். பிரிட்டனில் கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : boris johnson
ADVERTISEMENT
ADVERTISEMENT