உலகம்

தாயின் அறிவுரையைப் பின்பற்றி, சொந்தமான பொறுப்பை நிலைநிறுத்த வேண்டும்: ஷி ஜின்பிங்

11th May 2020 01:14 PM

ADVERTISEMENT

 

சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங்கின் அலுவலகத்தில் அவர் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர்களுடன் எடுத்த பல நிழற்படங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் ஒன்று, அவரும் தனது தாயும் கையோடு கைகோர்த்து உலா சென்ற நிழற்படமாகும். தாயின் அறிவுரை அவருக்கு முழு வாழ்விலும் நீதியை கற்றுக் கொடுத்தது.

ஷி ஜின்பிங் முன்பு கூறுகையில்,

ADVERTISEMENT

பெற்றோர்கள், சிறந்த ஒழுக்க நெறிக் கருத்துக்களை சிறிய வயதில் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இதன் மூலம், அவர்களது குழந்தைகள் சுகமாக வளர்ந்து, எதிர்காலத்தில் நாட்டுக்கும் மக்களுக்கும் பயன்தரும் குடிமகனாக ஆக முடியும் என்று கூறினார்.

ஷி ஜின்பிங்கின் தாய், குழந்தைகளை நன்றாக கவனித்ததோடு, சிறப்பாக வேலை செய்தார். களைப்பாக இருந்த போதிலும், அவர் இலட்சியத்தை முக்கியமாகக் கொண்டு, எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அவரது அறிவுரையின்படி ஷி ஜின்பிங்கும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

குடும்பத்திலும் குடும்பத்தினர்களுக்கிடையேயான உறவுகளிலும் ஷி ஜின்பிங் அதிகமான கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், தலைவரான அவர், விடுமுறை நாட்களில் வீட்டுக்குத் திரும்பி குடும்பத்தினர்களுடன் சேர்ந்து இருப்பது குறைவு.

மக்களுக்கு சேவை புரியும் மனத்துடன் பல்வேறு குடும்பங்கள் இன்பமான வாழ்க்கையை வாழ முடியும் என்பதை அவர் சொந்த இலக்காக மாற்றியுள்ளார்.

அவரது பெற்றோரின் முயற்சி அனுபவங்கள் அவருக்கு ஆழந்த செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த பல ஆண்டுகளாக, வேலை மற்றும் பதவி மாறிய போதிலும், அவர் தாயின் உரையை எப்போதும் மனதில் பதித்து, சொந்த பொறுப்பை நிலைநிறுத்தி வருகிறார்.

தகவல்:சீன ஊடக குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT