உலகம்

சிங்கப்பூரில் மேலும் 486 பேருக்கு கரோனா தொற்று

11th May 2020 04:13 PM

ADVERTISEMENT

 

சிங்கப்பூரில் மேலும் 486 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதில், 2 பேர் மட்டுமே சிங்கப்பூர் நாட்டினர், மற்றவர்கள் அனைவரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,882 ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக உள்ளது. சுமார் 2,715 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 

ADVERTISEMENT

இன்றைய தினம் பாதிப்பு குறைவாக வருவதற்கு இன்னும் பல சோதனைகள் முடிவுகள் வரவேண்டியுள்ளது காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, தெற்காசிய நாடுகளில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக சிங்கப்பூர் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT