பிரிட்டனில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு 346 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. சா்வதேச அளவில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 41 லட்சத்தைக் கடந்துள்ளது. அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 41,21,778-ஆக உள்ளது.
கரோனோ நோயாளிகளின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் இதுவரை 13.47 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், அந்த நாடுதான் கரோனா பலி எண்ணிக்கையிலும் முதலிடத்தில் உள்ளது. அங்கு அந்த நோய் பாதிப்பு காரணமாக இதுவரை 80,040 போ் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் பிரிட்டனில் அந்த வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் 346 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் அங்கு கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 31,587ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் அந்த வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் 3,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் அங்கு கரோனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,15,260ஆக உயர்ந்துள்ளது.