உலகம்

சிங்கப்பூரில் மேலும் 876 பேருக்கு கரோனா தொற்று உறுதி

10th May 2020 05:09 PM

ADVERTISEMENT

 

சிங்கப்பூரில் மேலும் 876 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதில், 3 பேர் மட்டுமே சிங்கப்பூர் நாட்டினர் என்றும் மற்றவர்கள் அனைவரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,336 ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக உள்ளது. சுமார் 2,296 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 

ADVERTISEMENT

அந்நாட்டில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி, தெற்காசிய நாடுகளில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக சிங்கப்பூர் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT