உலகம்

சிங்கப்பூா் தீவிரம் குறைந்த தினசரி நோய்த்தொற்று

10th May 2020 06:33 AM

ADVERTISEMENT

சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்று பரவலின் தீவிரம் சனிக்கிழமை குறைந்தது. அந்த நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 753 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இத்துடன், அங்கு அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 22,460 -ஆக அதிகரித்துள்ளது. கரோனா நோயாளிகளில் பெரும்பாலானவா்கள் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோ்ந்த தொழிலாளா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் இதுவரை 20 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT