கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸில், கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு இடையிலும் இரண்டாம் உலகப் போா் வெற்றி தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை பிரம்மாண்டமான ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. நாஜிக்களை வென்றதைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற அந்த அணிவகுப்பு குறித்து கவலை தெரிவிக்கப்பட்டாலும், அதனை அதிபா் அலெக்ஸாண்டா் லுக்ஷென்கோ புறக்கணித்தாா். சனிக்கிழமை நிலவரப்படி பெலாரஸில் 22,052 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்; அந்த நோய் பாதிப்பால் 126 போ் உயிரிழந்துள்ளனா்.