உலகம்

சீனாவுக்கு எதிராக அவதூறு கூறிய அமெரிக்க வெளியறவு அமைச்சருக்கு பதிலடி

9th May 2020 06:02 PM

ADVERTISEMENT

 

அண்மையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ பல முறை வெளியிட்ட சீனாவுக்கு எதிரான அவதூறு கருத்துகளுக்குப் பதிலளிக்கும் வகையில், சீன வெளியுறவு அமைச்சகம் செய்தி தொடர்பாளர் ஹுவாய் சுன் யிங் அம்மையார், நிறைய உண்மைகளையும் புள்ளி விபரங்களையும் எடுத்துக்காட்டியுள்ளார்.

புதிய ரக கரோனா வைரஸ் வூஹான் மாநகரத்தின் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்ற கூற்று குறித்து அவர் பேசுகையில்,

இப்போது அமெரிக்காவின் உச்ச நிலை நோய் கட்டுப்பாட்டு நிபுணர் ஃபோச்சி உள்ளிட்ட கிட்டத்தட்ட அனைத்து உச்ச நிலை அறிவியலாளர்களும் நோய் தடுப்பு நிபுணர்களும் பாம்பியோவின் கருத்தை வெளிப்படையாக மறுத்துள்ளனர்.

ADVERTISEMENT

சர்வேதச ஒத்துழைப்பு மேற்கொள்வது, அறிவியல் ஆய்வு பற்றிய தகவல்களை உடனடியாக வெளியிடுவது ஆகியவற்றில் வூஹான் வைரஸ் ஆய்வகம் எப்போதுமே ஊன்றி நின்று வருகின்றது என்றார் அவர்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT