உலகம்

பிரான்ஸில் கரோனா பலி எண்ணிக்கை 26,230ஆக உயர்வு

9th May 2020 04:23 PM

ADVERTISEMENT

பிரான்ஸில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 26,230ஆக உயர்ந்துள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பிரான்ஸிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் 243 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன் அந்நாட்டில் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 26,230ஆக உயர்ந்துள்ளது.  

அவர்களில் 16,497 பேர் மருத்துவமனையிலும், 9,733 பேர் நர்ஸிங் ஹோமிலும் பலியாகியுள்ளனர். தற்போது அங்கு மொத்தம் 22,700 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 2,868 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.  

Tags : france Corona
ADVERTISEMENT
ADVERTISEMENT