உலகம்

சீனாவில் 15 பேருக்கு அறிகுறியே இல்லாமல் கரோனா தொற்று உறுதி 

9th May 2020 05:24 PM

ADVERTISEMENT

சீனாவில் புதிதாக 15 பேருக்கு அறிகுறியே இல்லாமல் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலகளவில் அந்த வைரஸால் இதுவரை 40,32,763 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களில் 2,76,677 பேர் பலியான நிலையில் 13,99,718 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

இந்த நிலையில் சீனாவில் புதிதாக 16 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டில் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. அதில் 15 பேருக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கரோனாவால் இதுவரை 83,976 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 4,637 பேர் உயிரிழந்துள்ளனர். 

78,046 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். அதேசமயம் அறிகுறி தென்படாமலே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அல்லது கரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகத்துக்குரிய 836 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.
 

ADVERTISEMENT

Tags : China Corona
ADVERTISEMENT
ADVERTISEMENT