உலகம்

பொது மக்களின் உயிரைக் கருத்தில் கொள்ளாத அமெரிக்க அரசியல்வாதிகள்

9th May 2020 03:50 PM

ADVERTISEMENT

 

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்புடைய அமெரிக்க அரசின் பணியில் மாசுபடிந்த ரகசியங்கள் உள்ளன என்று அமெரிக்க உயிரி மருத்துவ முன்னேறிய ஆய்வு மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரிக் பிரைட் அண்மையில் தெரிவித்தார்.

இதற்கு முன், அமெரிக்கச் சிறப்பு ஆலோசகர் அலுவலகத்துக்கு அனுப்பபட்ட ஆவணம் ஒன்றில், கரோனா வைரஸ் பரவல் தடுப்பில் அமெரிக்க அரசு உரிய முயற்சி மேற்கொள்ளவில்லை. தான் காரணமின்றி வேலை நீக்கம் செய்யப்பட்டேன் என்று அவர் தெரிவித்திருந்தார். தன்னலத்துடன், பொறுப்புணர்ச்சியின்றி கடமையில் தவறு இழைத்த அமெரிக்க அரசியல்வாதிகள், அந்நாட்டின் கரோனா வைரஸ் தடுப்புப்பணியைத் தாமதப்படுத்தினர் என்று இதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. 

ரிக் பிரைட்டைப் போல், அமெரிக்காவின் தொற்று நோய் ஆய்வுக்கான தலைச்சிறந்த நிபுணர் அந்தோணி ஏஸ் ஃபௌசியும் அமெரிக்க அரசால் நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டார்.

ADVERTISEMENT

மேலும், கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பொருட்களின் வினியோகத்துக்குப் பொறுப்பேற்ற அமெரிக்க வெள்ளை மாளிகையைச் சேர்ந்த பணியளர்களுக்கு, தொடர்புடைய அறிவுகள் எதையும் தெரிந்து வைத்திருக்கவில்லை.

முக்கியமானவர்களின் பட்டியலின்படி, அவர்கள் மருத்துவப் பொருள்களை அனுப்பினர் என்று பிஸ்னஸ்இன்சைடர் உள்ளிட்ட அமெரிக்க ஊடகங்கள் குற்றம் காட்டியுள்ளன.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT