உலகம்

தொடர்ந்து 6வது நாளாக ரஷியாவில் 10 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று

8th May 2020 03:50 PM

ADVERTISEMENT

 

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,669 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

ரஷியாவில் தொடர்ந்து ஆறாவது நாளாக, நாள் ஒன்றுக்கு கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைத் கடந்த நிலையில் உள்ளது. நேற்றைய தினம் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 11,231 தொற்று உறுதி ஆனது. 

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 10,669 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அந்நாட்டில் மொத்த பாதிப்பு 1,87,859 ஆக அதிகரித்துள்ளது. ஜொ்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளை பின்னுக்குத் தள்ளி, கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 5-ஆவது நாடாக ரஷியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ரஷியாவில் இதுவரை கரோனாவுக்கு 1,723 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதே நேரத்த்தில் 26,608 பேர் மட்டுமே முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT