உலகம்

டிரம்புக்கு சீன செவிலியர் கடிதம்

8th May 2020 05:32 PM

ADVERTISEMENT

 

சீன செவிலியர் ஒருவர் அண்மையில் அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்புக்கு வெளிப்படைக் கடிதம் ஒன்றை வெளியிட்டார்.

இக்கடிதத்தில் வூஹான் நகரில் சேவைபுரிந்த போது இருந்த தனது உணர்வுகளை அவர் பகிர்ந்து கொண்டார்.

திடீரென ஏற்பட்ட நோய்த் தொற்று மிகவும் கடுமையானது. அப்போது சீனாவில் மருத்துவப் பொருள்கள் குறைவு. வியர்வை மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்ட போதிலும் சிக்கனம் கருதி பாதுகாப்பு ஆடையை யாரும் அகற்ற விரும்பவில்லை. எனவே பாதுகாப்பு ஆடை இல்லாத அமெரிக்க மருத்துவர்கள் நெகிழிப்பை அணிந்த காட்சியைப் பார்த்த போது, அவர்களின் உணர்வுகளை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

ADVERTISEMENT

மிகக் கடினமான காலம் கடந்து விட்டது. நோயாளிகள், குறிப்பாக முதுமையான நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்புவது எனக்கு பெரும் மகிழ்ச்சி தந்தது. வூஹானில், ஒவ்வொரு நோயாளிக்கும் முழுமூச்சுடன் சிகிச்சை அளித்துள்ளோம். உயிர் பாதுகாப்பு முதன்மை. உயிரைக் காப்பாற்றுவதே எங்கள் கடமை.

இப்போது வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்க மருத்துவர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு மரியாதை செலுத்துகின்றேன். அமெரிக்க மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றேன் என்று அவர் தெரிவித்தார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT