உலகம்

சீனாவின் அனுபவங்கள் கற்றுக்கொள்ளப்படத்தக்கது: உலகச் சுகாதார அமைப்பு

2nd May 2020 03:47 PM

ADVERTISEMENT

 

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பான செய்தியாளர் கூட்டத்தை, உலகச் சுகாதார அமைப்பு மே முதல் நாள் நடத்தியது.

இவ்வமைப்பின் அவசர சுகாதாரத் திட்டத்துக்கான பொறுப்பாளர் மைக்கேல் ரியான் கூறுகையில்,

கரோனா வைரஸ் மரபணு வரிசையை ஆய்வு செய்துள்ள அறிவியலாளர் பலர், இவ்வைரஸ் இயற்கையாக உருவாகி மனிதர்களுக்குப் பரவியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர் என்று கூறினார். 

ADVERTISEMENT

மேலும், வூஹான் நகரில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர் தற்போது எவரும் இல்லை என்பதற்கு இவ்வமைப்பின் அவசர சுகாதாரத் திட்டத்தின் தொழில் நுட்ப இயக்குநர் மரியா வான் கெர்கோவ் வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறுகையில்,

கரோனா வைரஸ் பரவல் தடுப்பில் சீனா பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளது. சீனாவில் 2 வாரம் தங்கியிருந்து, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பணியாளர்களுடன் பணியாற்றி உள்ளேன். அப்போது சீனா மேற்கொண்ட நடவடிக்கைகளை நேரில் கண்டேன். பல்வேறு நாடுகள், சீனாவின் அனுபவங்களைத் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றார் அவர். 

தகவல்:சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT