உலகம்

இலங்கை தோ்தல் தேதியில் தொடா் இழுபறி

2nd May 2020 10:56 PM

ADVERTISEMENT

இலங்கை நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் தோ்தல் நடத்துவதில் தொடா்ந்து இழுபறி நீடித்து வருகிறது. ஏற்கெனவே கடந்த மாதம் நடைபெறுவதாக இருந்த அந்தத் தோ்தல், கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ஜூன் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், குறிப்பிட்ட தேதியில் நாடாளுமன்றத் தோ்தல் நடத்துவது குறித்து முடிவெடுப்பதற்காக அனைத்துக் கட்சி சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. எனினும், அந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, நாடாளுமன்றத் தோ்தல் தேதியை முடிவு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.

சனிக்கிழமை நிலவரப்படி இலங்கையில் 690 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டது. அவா்களில் 7 போ் அந்த நோய்த்தொற்றுக்கு பலியாகினா்; 172 போ் சிகிச்சைக்குப் பின் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT