உலகம்

வைரஸ் தோற்றம் பற்றி அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய வேண்டும்: தி லேன்செட் தலைமைப் பதிப்பாசிரியர் கருத்து

2nd May 2020 03:59 PM

ADVERTISEMENT

 

 

உலகளவில் புகழ்பெற்ற தி லேன்செட் எனும் மருத்துவ இதழின் தலைமைப் பதிப்பாசிரியர் ரிட்ரார்ட் ஹோர்டன் மே முதல் நாள் சீன ஊடகக் குழுமத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், மக்களின் கவனத்தை ஈர்க்கும் அம்சங்களை எடுத்துரைத்தார்.

இந்த நோய் தொற்றைச் சமாளிப்பதில் சீனாவின் பல அனுபவங்கள் உலகம் கற்றுக் கொள்ளத்தக்கதவை. எடுத்துக்காட்டாக, தற்காலிக மருத்துவமனை, சீனாவின் வெற்றிகரமான நடவடிக்கைகளில் முக்கியத்துவம் மற்றும் புதுமை வாய்ந்த ஒன்று. இந்த நோய் தொற்றுக்குப் பிறகு மேலதிக நாடுகள் சீனா ஆற்றிய பங்கினை அறிந்துகொள்ள வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

ADVERTISEMENT

வைரஸ் தோற்றம் பற்றிய சதித்திட்டம் போன்ற வதந்திகள் குறித்து பேசிய அவர், வைரஸ் தோற்றம் பற்றி அணுகும் போது, அறிவியல் பூர்வமான பனப்பான்மையுடன் அதனை ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், போலியான தகவல் மற்றும் பொய்க் கூற்றுகளால் ஏற்படும் பாதிப்பு பெரும்பாலும் வைரஸ் பரவலால் ஏற்படும் பாதிப்புக்குச் சமமாக இருக்கும். எனவே வைரஸ் பரவலைத் தடுக்கும் அதேவேளையில் வதந்திகளை ஒழிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தவிரவும், அமெரிக்காவின் அறிவியல் மற்றும் மருத்துவத் துறையின் வளர்ச்சி நிலை பாராட்டத்தக்கது என்றபோதிலும், அந்நாட்டின் அரசியல்வாதிகளின் செயல்பாடு வருத்தம் அளிப்பதாய் உள்ளது என்று ஹோர்டன் கூறினார். வைரஸ் தோற்றம் பற்றி அவர்கள் சதித் திட்டத்தை உருவாக்கி பரப்புகின்றனர். ஆதாரம் இல்லாத சிகிச்சை முறையை ஆதரிக்கின்றனர். இதர நாடுகள் அல்லது அமைப்புகளை அவர்கள் வெளிப்படையாகக் குறைகூறி வருகின்றனர். இத்தகைய செயல்களால் எந்த பயனும் இல்லை. நாம் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே நோய் தொற்றால் ஏற்படும் அறைகூவல்களைச் சமாளிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பல நாடுகளில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு பற்றி குறிப்பிடுகையில், உலகச் சுகாதார அமைப்பு ஜனவரி 30ஆம் நாள் இந்த நோய் தொற்றை சர்வதேச பொது சுகாதார அவசர சம்பவமாக உறுதி செய்து, உலகிற்கு எச்சரிக்கை விடுத்தது. ஆனால் துரதிருஷ்டமாக பல நாடுகள் இந்த எச்சரிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. அதனாலேயே, பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

வூஹானில் முடக்கம் பற்றி ஹோர்டன் கூறுகையில், அவசர நிலையில் சீன அரசு எடுத்த இம்முடிவு சரியானது. திடீரென பரவத் தொடங்கிய வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் போது எப்படி செயல்பட வேண்டும் என்பதை சீனா இதன் மூலம் இதர நாடுகளுக்கு வெளிக்காட்டியுள்ளது. மேலும், இந்நோய் தொற்று தடுப்பில் முயற்சி மேற்கொண்ட சீனாவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், சீனாவில்தான் வைரஸ் தோன்றியது என்று சிலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இத்தகைய குற்றச்சாட்டுகளால் பயன் இல்லை, அது சரியும் இல்லை. நோய் தொற்றை எதிர்பாராத சீனா இதற்குப் பொறுப்பேற்கத் தேவையில்லை என்று ஹோர்டன் தெரிவித்தார்.

உலகத்துடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய சீன அனுபவங்கள் குறித்து அவர் கூறுகையில், சார்ஸ் நோயைக் கட்டுப்படுத்திய அனுபவம் சீனாவுக்கு உண்டு. கடந்த 20 ஆண்டுகளில் மருத்துவ மற்றும் சுகாதார அமைப்பு முறைக்கும் தொடர்புடைய ஆய்வுக்கும் சீனா பெரும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பல துறைகளில் திறமைமிக்க சீனா, புதிய ரக கரோனா வைரஸ் சார்ஸ் போல் உள்ளதை அறிந்துக் கொண்டதுடன் திட்டவட்டமான முடிவெடுத்தது. ஆனால் மேலை நாடுகள் இந்நோயை காய்ச்சல் என்றும் மட்டும் கருதின. இது மிக மிகத் தவறான மதிப்பீடு என்று கூறினார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT