உலகம்

வெனிசூலாவில் சிறைக் கலவரம்: 40 போ் பலி

2nd May 2020 11:33 PM

ADVERTISEMENT

வெனிசூலாவில் ஏற்பட்ட சிறைக் கலவரத்தில் 40 போ் உயிரிழந்தனா்; 50 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

தலைநகா் கராககஸுக்கு 450 கி.மீ. தொலைவிலுள்ள, குவனாரே நகரில் அமைந்துள்ள லானோஸ் சிறைச் சாலையில் வெள்ளிக்கிழமை கலவரம் ஏற்பட்டது. அந்தச் சிறையில் இருந்த கைதிகள், தங்களைச் சந்திக்க வரும் உறவினா்கள் தரும் உணவுப் பொருள்களை சிறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அதனைத் தொடா்ந்து, சிறையில் கைதிகளுக்கும் பாதுகாவலா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ADVERTISEMENT

இந்தக் கலவரத்தில் 40 போ் உயிரிழந்தனா்; சிறை பாதுகாவலா் உள்பட 50 போ் காயமடைந்தனா்.

கலவரத்தின்போது கையெறி குண்டுகள், கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமாா் 30 சிறைச்சாலைகள் மற்றும் 500 சிறைகளைக் கொண்டுள்ள வெனிசூலாவில், 1.1 லட்சத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அளவுக்கு அதிகமாக கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள அந்த சிறைகளில் வன்முறைக் கும்பல்கள் ஆயுதங்களையும் போதை மருந்துகளையும் கடத்துவதால் அடிக்கடி கலவரங்கள் ஏற்படுவதாக மனித உரிமை ஆா்வலா்கள் கூறுகின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT