உலகம்

டிரம்பும் சீனாவும் பிரிந்து செல்வதால் ஏற்படும் அபாயம்

30th Mar 2020 02:52 PM

ADVERTISEMENT

 

அமெரிக்காவின் நியூயார்க் நகரப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பீட்டர் பெயினார்ட் எழுதிய டிரம்பும் சீனாவும் பிரிந்து செல்வதால் ஏற்படும் அபாயகரம் எனும் கட்டுரை அமெரிக்காவின் தி அட்லாண்டிக் இணையத்தளத்தில் 28ஆம் நாள் வெளியிடப்பட்டது. 

தற்பொது கரோனா வைரஸ் பரவல் நிலைமையில், அமெரிக்கா சீனாவிடமிருந்து விலகிச் செல்ல வேண்டும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த சில விமர்சகர்களும் அரசியல்வாதிகளும் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். உண்மையில், இக்கரோனா வைரஸ் பாதிப்பைச் சமாளிக்கும் விதம் டிரம்ப் அரசால் பாதிக்கப்பட்ட அமெரிக்க-சீனப் பொது சுகாதார ஒத்துழைப்புறவை சரிச் செய்ய வேண்டும் என்று இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

டிரம்பின் உலகப் பார்வைக்கு மாறாக இரண்டு உண்மைகளை புதிய ரக கரோனா வைரஸின் தாக்கம் தெளிவுபடுத்தியுள்ளது. ஒன்று, பரஸ்பர தொடர்பு கொள்ளும் உலகத்தில் பன்னாடுகள் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மூலம் தான் அமெரிக்க மக்களின் பாதுகாப்பைச் சிறந்த முறையில் பாதுகாக்க முடியும். 

ADVERTISEMENT

இரண்டு, உலகமயமாக்கத்தில் அறிவு மற்றும் ஆற்றலின் சமநிலை மாறியுள்ளது. 2003ஆம் ஆண்டில், சார்ஸ் நிகழ்ந்தபோது, அமெரிக்கா, சீனாவின் ஆசிரியாராக இருந்தது. ஆனால், தற்போது கரோனா வைரஸைச் சீனா எவ்வாறு கட்டுப்படுத்தியது என்பதை அமெரிக்க மருத்துவர்களும் அறிவியலாளர்களும் ஆவலுடன் அறிந்து கொள்ள விரும்புகின்றனர். தற்போதைய சீனத் தொழிற்சாலைகள் உலக அளவில் பொது சுகாதாரத்தின் ஆயுத வங்கியாக திகழ்கின்றன என்று இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது.

தகவல்:சீன ஊடக குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT