உலகம்

பாகிஸ்தானில் கரோனா பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு

30th Mar 2020 02:18 PM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் முதல் முதலில் பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, உலகின் 190க்கும் மேற்பட்டநாடுகளில் 724,336 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பால் கொவைட்-19 எனப் பெயரிடப்பட்ட அந்த நோய்த்தொற்று காரணமாக இதுவரை 34,000-க்கும் மேற்பட்டவா்கள் பலியாகினா். 

இதையடுத்து, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானையும் கரோனா விட்டுவைக்கவில்லை. இங்கு நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் இதுவரை கரோனாவல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1600ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 17ஆகவும் உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

அதிகபட்சமாக பஞ்சாபில் 593 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிந்து - 502, கைபர் பக்துன்க்வா - 192, பலூசிஸ்தான் - 141, இஸ்லாமாபாத் - 43 மற்றும் கில்கிட்-பால்டிஸ்தான் - 123 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மிகக் குறைந்த எண்ணிக்கையாக 6 பேர் மட்டுமே வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  
 

ADVERTISEMENT

Tags : COVID19
ADVERTISEMENT
ADVERTISEMENT